விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற மம்மூட்டி கிளிம்ஸ்!
ஹிட் அடித்த மம்மூட்டிக்கான ஓம் கிளிம்ஸ்...
நடிகர் மம்மூட்டிக்கான ஓம் திரைப்பட கிளிம்ஸ் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது.
நடிகர் தனுஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஓம் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி நடித்து முடித்துள்ளார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் பர்மா கார்த்திகேயன் என்கிற கடத்தல்காரராக மம்மூட்டி நடிப்பதாக கிளிம்ஸ் வெளியிட்டிருந்தனர்.
காவல்துறை அதிகாரியாக, அரசியல்வாதியாக, கடத்தல்காரராக, தொழிலதிபராக என பன்முகம் கொண்ட ஆள் என்பது போல் கிளிம்ஸ் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த விடியோ வெளியான 25 மணி நேரத்திற்குள்ளாகவே யூடியூப் உள்பட சமூக வலைதளங்களில் 25 மில்லியன் (2.5 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. மேலும், குறைவான நேரத்தில் அதிக கிளிம்ஸ் பார்வைகளைப் பெற்ற முதல் மலையாள நடிகர் என்கிற பெயரும் மம்மூட்டிக்குக் கிடைத்துள்ளது.
ஓம் திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The glimpse of the movie om featuring actor Mammootty is garnering a high number of views.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.