ஜிவி பிரகாஷுக்கு ஆர்எக்ஸ் 100 வண்டியைப் பரிசளித்த இம்மோர்டல் தயாரிப்பாளர்!
ஜிவி பிரகாஷுக்கு ஆர்எக்ஸ் 100 பரிசளிப்பு...
இம்மோர்டல் திரைப்படத்தின் வெற்றிக்காக ஜிவி பிரகாஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் இருசக்கர வாகனத்தைப் பரிசளித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த திரைப்படமான இம்மோர்டல் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஹாரர் திரைப்படமான இதில் கயாடு லோஹர் நாயகியாக நடித்திருந்தார். ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையம்சம் கொண்ட இப்படத்தின் சில காட்சிகள் கவனம் பெற்றாலும் ஒட்டுமொத்தமாக கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
Advertisement
Advertisement
ஆனால், ஆச்சரியப்படும் வகையில் வசூல் ரீதியாக இப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியால் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு புது ஆர்எஸ் 100 ரக யமஹா இருசக்கர வாகனத்தைப் பரிசாக வழங்கியுள்ளார். இதன் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
The film's producer has gifted a two-wheeler to GV Prakash for the success of the movie 'Immortal'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.