FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருது விழாவில் தொகுப்பாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய நடிகர் ராணா!

நடிகர் ராணா விருது விழா ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

39 வினாடிகள் முன்பு
ராணா டகுபதி
பகிர்:

நடிகர் ராணா விருது விழா ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா செப். 12 , 13 தேதிகளில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான 14-வது சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 6 விருதுகளை வென்றது.

இந்த விழாவில், தெலுங்கு நடிகர் ராணா செய்த செயல் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

சைமா விருது விழாவை கன்னட தொகுப்பாளர் அகுல் பாலாஜி தொகுத்து வழங்கினார். ராணாவின் அடுத்த படத்தின் நடிகர், நடிகைகளுடம் உரையாடிய அகுல் பாலாஜி, அவர்களிடம் ​​'மிராய் 2' படத்தில் ராணா நடிப்பாரா என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதனால், அவரை வேடிக்கையான முறையில் பழிவாங்க அகுல் பாலாஜி மீது மேடையை நோக்கி தண்ணீர் பாட்டிலை நடிகர் ராணா வீசியெறிந்தார்.

ராணாவின் செயலால் அங்கு குழுமியிருந்த திரைத்துறையினர் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். மேலும், இருவருக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் பாட்டிலை வீசியது விளையாட்டாக செய்யப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

ராணா பாட்டிலை வீசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் விளையாட்டாக அவ்வாறு செய்தது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேடையை நோக்கி பாட்டிலை வீசுவது விளையாட்டாகச் செய்வதைப் போன்று இல்லை; கோபத்தில் வீசியதைப் போன்று தெரிவதாக என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

summary

Actor Rana throwing a water bottle at an event host during an awards ceremony has become a topic of discussion on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments