எம். எஸ். சுப்புலட்சுமி பயோபிக் திரைப்படம்! கிளாப் அடித்து தொடங்கி வைத்த கமல்ஹாசன்!
எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்திய இசை வரலாற்றில் மிக முக்கியமானவர் எம். எஸ். சுப்புலட்சுமி. கர்நாடக இசைக் கலைஞராக மொழி, எல்லை, தலைமுறைகள் என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை இன்றுவரை பயணித்து வருகிறது.
பல இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்க பல நிறுவனங்கள் முயன்ற நிலையில், மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தை கௌதம் தின்னுரி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். அல்லு அரவிந்த் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியாகின்றது. முன்னதாக, படத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு, இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
முதலில், இப்படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ராஷ்மிகா நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kamal Haasan clapped the the first take to launch the biopic of M. S. Subbulakshmi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.