FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸ் 10: காமன்மேன் ஜேசன், ஷமா போல் நடித்து அசத்திய நடிகை ஷாதிகா, முகேஷ்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஷாதிகாவும் நடிகர் முகேஷும் காமன்மேன்களாக நடித்துக் காட்டியது குறித்து...

23 செப்டம்பர் 2026, 3:59 pm IST
ஷாதிகாவும் முகேஷும் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன்களாக பங்கேற்றுள்ள ஜேசன் மற்றும் ஷமாவைப்போல நடிகர்கள் ஷாதிகாவும் முகேஷும் நடித்துக்காட்டியது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 3வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணியின் தலைவராக அவினாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ராகவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனியே பிக் பாஸ் வீட்டில் தாங்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அந்த பெயர் அடங்கிய பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு உள்ளனர். நான் ஒரு வேஸ்ட் பீஸ், மக்களிடம் கெஞ்சுபவன் உள்ளிட்ட பலகைகளை மாட்டிக்கொண்டு உள்ளனர்.

Advertisement

Advertisement

இதனிடையே கடந்த வாரம் சீஸ் டாஸ்க் என்ற போட்டியில் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஷமா, ஜேஷன் விளையாடிய விதம் பலரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனினும், நிகழ்ச்சிக்கான சுவாரசியத்தை அது அதிகரிக்கச் செய்தது.

ஷமாவும் ஜேசனும் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், அந்த போட்டியின்போது ஷமாவும் ஜேசனும் எவ்வாறு பேசிக்கொண்டனர் என்பதை நடிகை ஷாதிகாவும் நடிகர் முகேஷும் தத்ரூபமாக நடித்துக்காட்டினர். இருவரின் உடல்மொழியுடன் அவர்கள் பேசிக்கொண்டதைப்போன்றே ஷாதிகாவும் முகேஷும் நடித்தனர்.

பிக் பாஸ் வீட்டில் அரங்கேற்றம்

பிக் பாஸ் வீட்டில் இருந்த ஷமா, ஜேசன் உள்பட பலரையும் இவர்களின் நடிப்பு கவர்ந்தது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஷாதிகாவையும் முகேஷையும் பாராட்டி வருகின்றனர்.

summary

BIgg boss 10 tamil shathiga mukesh act like commonman winners jason shama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments