எல். கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம்!
எல். கே. அக்ஷய் குமாரின் புதிய திரைப்படம் அறிவிப்பு...
நடிகர் எல். கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல். கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கிரைம் டிராமா பாணியில் உருவாகும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிக்கிறார். எல். கே. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் எல். கே. அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குநர் எச். வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எச். வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.
ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். இசையை ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. வெவ்வேறு களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், கிரைம் டிராமா ஜானரில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகவுள்ளது.
Filming for the new movie starring actor L.K. Akshay Kumar has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.