ஓடிடியில் வெளியாகும் ரம்பா ஊர்வசி மேனகா! நகைச்சுவை கலந்த கற்பனைத் திரைப்படம்!
ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர மோகன் சிந்தடா இயக்கத்தில் அல்லரி நரேஷ், சுரபி, வென்னேலா கிஷோர், ராஷி சிங், விஷ்ணு பிரியா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ரம்பா ஊர்வசி மேனகா.
தேவலோகத்தில் இருக்கும் ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோரை பூமிக்கு வரவழைக்கும் மனிதனின் முயற்சியும், அதை இந்திரன் தடுப்பதும் குறித்த நகைச்சுவை கற்பனைக் கதையாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் ஹாஸ்யா மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
பழைய காலத்து நகைச்சுவையை ரசிப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றவகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தேவலோகம் மற்றும் பூமிக்கு வரும் தேவதைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் வண்ணமயமாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம் ரெட்டி.
இந்த நிலையில், ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படம் செப். 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
The OTT release date for the movie Rambha Urvasi Menaka has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.