முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை!
சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடிகர் சூர்யா நடித்து இந்தாண்டு வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படமும் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்த் திரையுலகில் மீண்டும் தனது வெற்றிப் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அதேபோல, வருகிற தீபாவளி அன்று மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சீன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெற்றி பெற்றால், ஒரே ஆண்டில் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்வில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், “அன்பை மட்டுமே விதைப்போம். சமூக ஊடகங்களில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்காக, நாமும் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் நாமும் முட்டாளாகிவிடுவோம். நாம் நாமாகவே இருக்கும். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேசத் தேவையில்லை. அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். அவர்களை மாற்ற வேண்டும் முயற்சி செய்தால் கொஞ்சம் கஷ்டம்தான். சிலருக்குப் புரியும். முக்கால்வாசி பேருக்கு அது புரியாது. உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டாம். உங்களுக்கு பிடித்ததைத் தீவிரமாக தினமும் செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.
சமீபத்தில் சர்தார் - 2 மற்றும் மண்டாடி படங்களுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். அது சூர்யாவை விமர்சிக்கும் விதமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், சூர்யா இன்று யாரைக் குறிப்பிட்டு அவ்வாறு பேசினார் என்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
Actor Suriya advised fans not to respond to criticism on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.