FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஃபஹத் ஃபாசிலால் இதைச் செய்ய முடிகிறது: நடிகர் சூர்யா

ஃபஹத் ஃபாசில் குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளார்...

நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், சூர்யா.
பகிர்:

நடிகர் சூர்யா டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்பட நிகழ்வில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் (Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்திற்கான தமிழ் புரமோஷன் நிகழ்வு நேற்று (செப். 27) சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, “ஃபஹத் என்னை அண்ணன் என்று அழைத்து விட்டார். சந்தோஷம். நாங்கள் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். காலை, மாலை, மதியம், இரவு, நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது.

எங்கள் இருவருக்கும் இடையே தொடக்கக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம். தற்போது உள்ள நிலைக்காக நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து... கால் உடைந்து... எழுந்து நின்று... அதன் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம். அதற்காக அவருக்கு நன்றி.

நாம் அனைவரும் ஒரு கணக்கு போடுவோம். இந்த மாதிரி படம் எடுத்தால்... இவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த மாதிரி படம் எடுத்தால்... மற்றவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காதே..! என ஒரு கணக்கு வாத்தியார் போல் நிறைய கணக்குகளை போடுவோம். நடிகர்கள் எல்லாரும் ஒரு இமேஜுக்குள் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஃபஹத் பாசிலிடம் இல்லை. நான் இன்னும் இந்த கணக்குகளை தப்புத் தப்பாகத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவரைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். கதை நன்றாக இருக்கிறதா? அதில் தன்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்க்கிறார். இந்த ‘கன்டன்ட்’டை ரசிகர்களுக்கு நம்மால் கரெக்டாக கொடுத்து விட முடியுமா? என்று சிந்திக்கும் நபர்தான் ஃபஹத் ஃபாசில். அதனால்தான் அவரால் இதுபோன்று கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க முடிகிறது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

அவருடைய கதாபாத்திரத்திற்கு அனைத்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசி இருக்கிறார். நாமெல்லாம் ஒரு கேரக்டராக இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் பகத் அந்த கேரக்டராகவே இருப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.

Actor Suriya attended and spoke at the event for the movie Don't Trouble the Trouble.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments