பிக் பாஸில் முதல்முறை... பணப்பெட்டியுடன் வெளியேறிய குமரன்!
பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் குமரன் வெளியேறியது பற்றி...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக 4-வது வாரத்திலேயே பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை எடுத்த குமரன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி ஒரு முக்கியமான திருப்புமுனையை நோக்கி நகர்கிறது.
கேப்டனால் கடந்த மூன்று வாரங்களாக வெளியேற்றப்பட்ட லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவேத் ஷெரிப் ஆகியோர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
Advertisement
Advertisement
இவர்கள் மூவரும் ஏற்கெனவே வீட்டிலிருக்கும் மோசமாக விளையாடும் ஒரு போட்டியாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கயிறு மூலம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதன்படி, லட்சுமி பிரியா, குமரனுடன், சவின்யா, அஸ்மிதாவுடன், ஜாவேத் ஷெரிப், தன்யாவுடன் இணைக்கப்பட்டனர். இந்த ஆறு போட்டியாளர்களில் மூவர் மட்டுமே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்ற நிலையில், பல்வேறு டாஸ்க்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கயிறை கழட்டிவிட்டு, பிக் பாஸிலிருந்து வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியின் கடைசி வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் பணப்பெட்டி, இந்த சீசனில் 23-வது நாளிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சின்னத்திரை நடிகர் குமரன் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
For the first time in Bigg Boss... Kumaran left with a cash box!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.