சினிமாவுக்கு குட்பை சொல்லவிருக்கிறாரா நடிகை சமந்தா?
அண்மையில் வெளிவந்த நடிகையர் திலகம், இரும்புத்திரை மற்றும் கோலிவுட்டில் ரங்கஸ்தலம்
அண்மையில் வெளிவந்த நடிகையர் திலகம், இரும்புத்திரை மற்றும் கோலிவுட்டில் ரங்கஸ்தலம் என தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார் சமந்தா. அடுத்து சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், சீமராஜா வெளியாகவிருக்கிறது.
இப்படி மெஹா ஹிட் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வரும் சமந்தாவின் திரைப் பயணத்தில் திருமணத்துக்குப் பிறகு அவர் ப்ரேக் எடுக்கவில்லை.
முன்பு ஒரு பேட்டியில் திருமணத்துக்குப் பிறகு கட்டாயம் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் குடும்ப வாழ்க்கையில் முக்கியமான விஷயம் குழந்தைப் பேறு.
Advertisement
Advertisement
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் நிச்சயம் எல்லாவற்றிலிருந்து விடை பெற்று, 24 மணி நேரமும் குழந்தையுடன் மட்டும் தான் இருப்பேன். அதை விட வேறு ஒரு விஷயமும், சினிமா உட்பட எனக்கு முக்கியமில்லை. என்னுடைய ஒவ்வொரு நொடியும் என் குழந்தைக்கு அர்ப்பணிப்பதையே சந்தோஷமாகச் செய்வேன்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் புதுப் படங்கள் எதிலும் சமந்தா கமிட் ஆகவில்லை என்றும் அடுத்த ஆண்டு முதல் நடிப்பிலிருந்து சிறிது ஓய்வு எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியாக அவரது ரசிகர்களுக்கிடையே பரபரப்பானது. அதனால் அடுத்த ஆண்டு பெர்சனல் வாழ்க்கைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறார் என்பது தெரிகிறது.
இது குறித்து சமந்தாவின் காதல் கணவருர் நடிகர் நாக சைதன்யா கூறுகையில், சமந்தாவிற்கு தற்போது சினிமாவிலிருந்து விடை பெறும் எண்ணமில்லை. ஆனால் சில மாதங்கள் தனக்காக ப்ரேக் எடுத்துக் கொள்வார் என்றார்.