FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:11 am IST
கரூா் மாவட்டம், திருக்காம்புலியூரில் அமைக்கப்பட்ட காவிரி-வைகை குண்டாறு நதி நீா் இணைப்புக் கால்வாய். (கோப்புப் படம்).
பகிர்:

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ராமநாதபுரம் மாவட்டச் செயலா் சி.முத்துராமலிங்கம் கூறியதாவது:

காவரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, வேலைகள் தொடங்கின.

Advertisement

Advertisement

இதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கான நிதியை ஒரே கட்டத்தில் ஒதுக்கீடு செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதேபோல, தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி கூறியதாவது:

தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கம் தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கான முழு நிதியையும் ஒதுக்கி, திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments