FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நியூஸ் ரீல்

21 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சனுடன் நடிக்கிறேன்! ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சி!

எஸ்.ஜே. சூர்யா நடித்த "கள்வனின் காதலி', "மச்சக்காரன்', "நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன்,

Updated On : 26 ஏப்ரல் 2019, 12:20 pm IST
பகிர்:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் 'நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இதில் அஜித், வித்யா பாலன், சிராத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கல்கி கோச்லின் ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழை சரளமாக பேசும் கல்கி கோச்லின், இப்படத்தின் நடன காட்சிக்கான பாடலை மலேசிய ராப் பாடகர் யுனோஹூவுடன் சேர்ந்து பாடியுள்ளார். ஏற்கெனவே இவர் அண்மையில் வெளியான 'கல்லிபாய்' என்ற படத்திலும் இசையமைப்பாளராக நடித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா நடித்த 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்', 'நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன், தற்போது இயக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தில் முதன்முறையாக தமிழில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

1988-ஆம் ஆண்டு வெளியான 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார். இந்தியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தேரா யார் ஹூன் மெய்ன்' என பெயரிட்டுள்ளனர்.

'லஸ்ட் ஸ்டோரி' படத்திற்குப் பின் 'கலங்' என்ற படத்தில் வருண்தேவனுடன் ஒரு பாடலுக்கான சிறப்பு காட்சியில் நடித்துள்ள கியாரா அத்வானி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான 'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார். 'லட்சுமி' என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை முடிவாக வில்லையாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments