FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கண்ணில் சிறந்த உறுப்பில்லை

உலக சுகாதார நிறுவனம், கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையை உலக கண் பார்வை தினமாக அறிவித்துள்ளது.

5 ஜனவரி 2024, 12:28 pm IST
பகிர்:

உலக சுகாதார நிறுவனம், கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையை உலக கண் பார்வை தினமாக அறிவித்துள்ளது.

உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. 246 மில்லியன் பேர் மிகக் குறைவான பார்வையோடும் 39 மில்லியன் பேர் பார்வையில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உடையவர்களாக இருக்கின்றனர். பார்வையற்றவர்களில் 82 சதவீதம் பேர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர்.

Advertisement

Advertisement

உலக அளவில் திருத்தப்படாத பார்வைத்திறன் (ன்ய்ஸ்ரீர்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க் ழ்ங்ச்ழ்ஹஸ்ரீற்ண்ஸ்ங் ங்ழ்ழ்ர்ழ்ள்) பிரச்னையே பார்வைக் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கிறது. கண் புரை எனப்படும் "கேட்டராக்ட்' பார்வையிழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. 80 சதவீதம் பார்வைக் குறைபாடுகளை தவிர்க்க முடியும் அல்லது குணப்படுத்த முடியும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண்புரை. கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும்.

கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும், மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண்புரை என்பது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய குறைபாடே. மேலும், கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்.

க்ளாக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது.

கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது க்ளாக்கோமா ஏற்படுகிறது. ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால் குணம் பெறலாம்.

நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒருமுறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும்.

மேலும், பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல், வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஊக்குவியுங்கள். அய்யோ நம் குழந்தை இந்த வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியதாகிவிட்டாதே என்று புலம்பாதீர்கள்.

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண் பரி

சோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பார்வைத் திறன் மாறியிருக்கலாம். தவறான கண்ணாடியை அணிவதும் கண்களைப் பாதிக்கும்.

கணினியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20 ஃபார்முலாவைப் பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

அதாவது, கணினியில் தொடர்ந்து பணியாற்றும்போது, 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருள்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை கண்களை இமைப்பதும் நல்லது.

ஒருவருக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல் இருக்குமேயானால் உடனடியாக அவர் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பார்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.

தானத்தில் சிறந்தது கண் தானம். கார்னியல் பார்வைக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்து, கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே மீண்டும் பார்வை கிடைக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது. நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து, அவரது கண்களைத் தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்களைத் தானமாக வழங்கினால் அது ஒரு புண்ணியமான செயலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments