இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கியிருந்தால், வியக்கத்தகு மலேசிய பயணத்திற்கு திட்டமிடுகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால் நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளீர்கள் என்று சொல்லலாம். உங்கள் அனைவருக்கும் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நாங்கள் உள்ளோம்.
அடிப்படையான சில கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் இதனைத் தொடங்கலாம்: உங்களுக்கு விசா சிபாரிசுடன் பெற வேண்டுமா அல்லது சிபாரிசு இல்லாமல் பெற வேண்டுமா? சிபாரிசு இல்லாமல் விசா பெறுவதற்குத்தான் மலேசிய தூதரகம் சுற்றுலா, வணிகம் அல்லது சமூக வருகைக்காக ஒப்புதல் அளிக்கிறது. சிபாரிசுடன் செல்வதென்றால் வேலை, ஆய்வு அல்லது எந்தவொரு சமூக பங்களிப்பாகவும் இருக்கலாம். மலேசிய விசாவுக்கு விண்ணப்பிக்க உங்கள் பயண தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பெங்களூருவிலிருந்து மலேசியாவிற்குச் செல்ல விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கிறதா? தொடர்ந்து படிக்கவும்
பெங்களூருவில் மலேசிய சுற்றுலா விசா விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
எல்லா நாடுகளில் நடைமுறையில் உள்ளது போலவே, இந்தியாவிலும் தூதரகங்களில் VFS வழியாக விசா வழங்குதல் நடைபெறுகிறது. பெங்களூருவில் குறிப்பாக, அனைத்து விசா தொடர்பான ஆவணங்களும் (கீழே குறிப்பிடப்பட்டவை) VFS அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன, இவை மலேசிய தூதரகத்தின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மலேசியாவின் விசா பெங்களூரு வழியாக விண்ணப்பிக்கும் போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள மலேசிய விசா அத்தியாவசிய ஆவணங்களை இந்தியர்கள்
கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்
மேற்கூறப்பட்ட அனைத்து ஆவணங்களும் A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும். மேற்சொன்ன ஆவணங்களின் பட்டியல், நீங்கள் விண்ணப்பிக்கும் பிராந்திய விசா மையத்தின் அடிப்படையில் வேறுபடலாம்.
மலேசியா விசாவின் செலவினம் மற்றும் கால வரையறை
உங்கள் பாஸ்போர்ட்டைப் பெற பொதுவாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கூட ஆகும். மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை 5 வேலை நாட்களில் கூட பெற்றுள்ளார்கள். ரூபாய் 3,400/- என்பது ஒரு வருடத்திற்கான மட்டுமேயான விசா கட்டணமாகும். விசா தொடர்பான தகவல்களை நேரடியாக அல்லது SMS மூலம் பெற கூடுதல் கட்டணத்துடன் பெற முடியும். இதைப் பற்றி மேலும் இங்கே படிக்கலாம்.
ஈ-விசா பெற என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் மலேசிய பயணத்துக்கு ஈ-விசா பெற இந்தச் சுட்டியை திறக்கலாம். மலேசியா ஈ-விசா விண்ணப்பம் மேலும் நீங்கள் சில விஷயங்களை தெரிந்து வைத்து கொள்ள:
• KLIA
• LCCT
• பினாங்கு விமான நிலையம்
• செனாய் விமான நிலையம்
• குச்சிங் விமான நிலையம், மற்றும்
• கோட்டா கினாபாலு விமான நிலையம்
இவை அனைத்தையும் மிகச் சரியாக செய்து முடித்த பின்னரும், உங்கள் விசா ஒப்புதல் என்பது முற்றிலும் துணை தூதரகத்தில் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.