FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்

கவிஞர் வைரமுத்துவின் மீதான பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 10 அக்டோபர் 2018, 4:35 pm IST
பகிர்:

ஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு தற்போது கோலிவுட்டிலும் ஏற்பட்டுள்ளது. 

மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

இதனைத் தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, வைரமுத்துவால் தனக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாகப் பதிவிடத் தொடங்கினார். 

Advertisement

Advertisement

முதலில், சுவிட்சர்லாந்தில் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டார். கடந்த 2005 அல்லது 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் வைரமுத்து தங்கியிருந்த லூசிரின் விடுதியில் அவருடன் இணக்கமாகச் சென்று ஒத்துழைக்குமாறு அந்த விழா ஏற்பாட்டாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு மறுத்தபோது எனது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மிரட்டப்பட்டேன். இருப்பினும் நானும் எனது தாயாரும் உடனடியாக இந்தியா திரும்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்.  

கடந்த 3-4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடுமாறு என்னிடம் வைரமுத்து தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் மறுத்தபோது, அவதூறாகப் பேசியதாக ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கூறுவதாக மிரட்டினார். எனது திரை வாழ்வில் தற்போது வரை வைரமுத்து மட்டும் தான் என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என்று பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே இத்தனை காலமாக இதை ஏன் வெளிப்படையாக் கூறவில்லை என்று பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதற்கும் பதிலளித்து வருகிறார். குறிப்பாக அவரவர் வீட்டுப் பெண்களுக்கும் பணியிடங்களில் இதுபோன்று நடத்திருக்கலாம் எனவே அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004-இல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து எனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது. அப்போது வெளியில் சொல்லக்கூடிய சூழல் இல்லை. தற்போது சொல்வதால் இதுபோன்று மேலும் பல பெண்களுக்கு நடப்பதை தவிர்க்கலாம் என்று பாடகி சின்மயியின் தாயார் விமலா தெரிவித்தார். 

தற்போது பாடகி சின்மயிக்கு ஆதரவாக முன்னணி நட்சத்திரங்கள் சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் வைரமுத்து நடத்தி வரும் விடுதியில் தங்கியள்ள பெண்களிடமும் அவர் பாலியல் தொல்லைகள் அளித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் பலர் தங்களின் விவரங்களை வெளியிட விரும்பவில்லை எனவும், ஆனால் வைரமுத்துவால் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாகவும் சின்மயி மற்றும் சந்தியா ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். 

வைரமுத்து பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பதிவிட்டுள்ளதாவது:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments