FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இறைவன் இருக்கின்றானா? - ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 26

இறை மறுப்பாளர்கள், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் 'இறைவன் இருக்கின்றானா?' என்று கேட்டனர்.

1 பிப்ரவரி 2024, 2:35 pm IST
பகிர்:

இறை மறுப்பாளர்கள், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் "இறைவன் இருக்கின்றானா?' என்று கேட்டனர்.

இமாம் - எனக்குக் கிடைத்த ஒரு செய்தியைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

இறைமறுப்போர் - என்ன செய்தி ?

Advertisement

Advertisement

இமாம் - சரக்குகள் நிறைந்த கப்பல் ஒன்றில் மாலுமி இல்லை. காவலர்களும் இல்லை. ஏவலர்களும் இல்லை. அந்தக் கப்பல் பேரலைகளைக் கிழித்து கொண்டு தானாகவே ஓடுகிறது.

இறை மறுப்போர் - செலுத்துவார் இன்றி அழுத்தும் அலை கடலில் நிலை குலையாது கப்பல் செல்கிறது என்பதை அறிவுடையவன் சொல்ல மாட்டான்.

இமாம் - உங்கள் வாதப்படி செலுத்துவார் இன்றி செழுங்கடலில் கப்பல் செல்ல முடியாது என்றால், விண்ணும் மண்ணும் அவற்றிலுள்ள அனைத்தும் இயக்குவோர் இன்றி இயங்குமா?

பதில் சொல்ல முடியாமல் திகிலுற்று திகைத்த இறை மறுப்பாளர்கள், இமாம் அவர்களின் கைகளைப் பற்றி ஏக இறைக் கொள்கையை ஏற்றனர்.

மன்னர் ஹாரூன் ரசீத் இறைவன் இருப்பதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஆதாரம் கேட்டார். "மனிதர்கள் பேசும் மொழி வேறுபட்டு இருப்பதும், ஒலிகளும், ராகங்களும் மாறுபட்டு இருப்பதும் இறைவன் உள்ளதை உணர்த்தும் சான்றுகள்!' என்று பதில் அளித்தார்கள்.

இக்கேள்வி இமாம் ஷாபி ஈ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. "முசுக்கட்டை மர இலைகளின் சுவை ஒன்றுதான். அந்த இலைகளைத் தின்னும் பட்டு பூச்சி, பட்டு நூலைத் தருகிறது. அந்த இலையைச் சாப்பிடும் தேனீ, தேனைத் தருகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதை உண்டு விட்டு பாலைத் தருகின்றன. அதே இலையைத் தின்னும் மான்கள் மணமிக்க கஸ்தூரியைத் தருகின்றன. இவற்றை நிர்ணயிப்பவன் நிச்சயமாக உள்ளான்' என்று எச்சரித்தார்கள்.

இமாம் ஹன்பல் (ரலி) அளித்த விளக்கம்: ஒரு பாதுகாப்பான பளிங்கால் ஆன கோட்டை, வெளிப்புறம் வெள்ளியைப் போன்று வெண்மையானது.

உட்புறம் பொன் போன்ற நிறமுடையது. நுழைவாயில் இல்லை. திடீரென அந்தக் கோட்டையின் சுவர் பிளக்கிறது. செவி புலனும், கண் பார்வையும் உள்ள உயிர் வெளிவருகிறது. பொலிவான தோற்றம். இனிய குரல். கோழிக் குஞ்சை முட்டையிலிருந்து வெளிவரச் செய்பவன் யார்?'

இமாமின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது கேள்வி கேட்டவர்கள் இன்னும் கேள்வி கேட்டு, கேலிக்குரிய போலிகளாகத் திரியாமல், பொன்னான ஏக இறைக் கொள்கையை ஏற்று ஏற்றம் பெற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments