FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை இன்று வெளியாகுமா? இயற்பியல் தேர்வு முறை - முழு விவரம்

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியாவது எப்போது, இயற்பியல் தேர்வு முறை பற்றிய முழு விவரம்

சிபிஎஸ்இ - பிரதிப் படம்
பகிர்:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே, ஜனவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றால், அந்த தேதியில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒன்றாக வந்து மாணவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.

100 மதிப்பெண்களைக் கொண்ட இயற்பியல் பாட தேர்வு முறை குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. 70 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வும் 30 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப்படும். மொத்தம் மூன்று மணி நேரம் வழங்கப்படும், 5 பிரிவுகளில் 33 கட்டாய வினாக்கள் எழுப்பப்படும்.

Advertisement

Advertisement

செய்முறைத் தேர்வு என்பது சோதனைகள், செயல்பாடுகள், ஆய்வுக் திட்டம், பதிவேடு மற்றும் வாய்மொழியாக பதிலளிப்பது ஆகியவை அடங்கும்; இவை மொத்தம் 30 மதிப்பெண்களைக் கொண்டவை. மாணவர்கள் குறைந்தபட்சம் 8 சோதனைகள், 6 செயல்பாடுகள் மற்றும் 1 திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பாடத்தின் தேர்வுக் குறியீடு 042. இந்தப் பாடப்பிரிவில் எடுக்கும் மதிப்பெண் கட்-ஆஃப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பாடமாகவும் இது உள்ளது.

summary

When will the CBSE exam schedule be released? Physics exam pattern – full details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.