முகப்பு

சிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?

சிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவது எப்படி, அந்தக் குழுவில் இடம்பெறுவோர் பற்றி...

52 வினாடிகள் முன்பு
சிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?
சிபிஎஸ்சி - ani
பகிர்:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் தெரியும், தேர்வு வினாத்தாள் இதுவரை எத்தனை முறை வரலாற்றிலேயே கடினம் என்ற சாதனைகளை முறியடித்திருக்கிறது என்று.

ஆண்டு முழுவதும் ஒரு புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் படித்தாலும், நாம் புரட்டும்போது புத்தகத்தின் ஒரு மூலையில் எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டால், அதுதான் முக்கியமான கேள்வியாக வரும் என்பதை பலரும் உணர்ந்திருப்பர். யார்ரா இந்த வினாத்தாளை தயாரிப்பது? என புலம்பாத மாணவர்களே இருக்க மாட்டார்கள்.

ஏன் இந்த அளவுக்கு கடினமாக உள்ளது எனில், ஒரே ஒரு புத்தகத்திலிருந்து வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை. சிபிஎஸ்இ முன்கூட்டியே வெளியிடும் பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். ஆனால், அந்தப் புத்தகத்தில் நேரடியாக வினாத்தாள் கேட்கப்படாது. என்சிஇஆர்டி புத்தகத்தில் என்ன கற்பிக்கப்பட்டுள்ளதோ, அதை அடிப்படையாக வைத்து, மாணவர்களின் புரிதல் திறனை வெளிப்படுத்தும் வகையில்தான் கேள்விகள் அமையும்.

Advertisement

Advertisement

எனவே, வேறு எதனையும்விட, என்சிஇஆர்டி புத்தகத்தை முழுமையாக படித்தாலே போதும் என்று எப்போதும் ஆசிரியர்கள் சொல்வதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மாதிரி வினாத்தாள்களை சிபிஎஸ்இ வெளியிடுகிறது. இவை மாணவர்களுக்கு வினாத்தாளின் அமைப்பு குறித்த ஒரு தெளிவான புரிதலை வழங்குகின்றன. வினாத்தாளைத் தயாரிப்பதற்கு முன்னதாக, ஒரு மாதிரி (blueprint) உருவாக்கப்படுகிறது. இது வினாத்தாளில் எத்தனை ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற வேண்டும், 2, 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் எத்தனை இருக்க வேண்டும், புரிதலை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் எத்தனை, மற்றும் பயன்பாடு அல்லது பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் எத்தனை இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

ஒரே நபர் இதனைத் தயாரிப்பதில்லை, ஆசிரியர்கள், பாட நிபுணர்கள், தேர்வர்கள் இணைந்து வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. முதலில் ஒரு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அது மீண்டும் மறுசீரமைக்கப்படும். வினாத்தாளில் தவறுகள், சிக்கலான விடைகள் மாற்றப்படும். பிறகு உறுதி செய்யப்படுகிறது.

இந்த வினாத்தாளை எதிர்கொள்ள...

  • என்சிஇஆர்டி புத்தகத்தை முழுவதும் படிக்க வேண்டும்

  • ஒவ்வொரு பாடத்தையும் புரிந்து படிக்க வேண்டும்

  • முந்தைய ஆண்டுகளில் வெளியான வினாத்தாள்களை எழுதிப் பார்க்க வேண்டும்

  • வினாத்தாள்களை உரிய நேரத்துக்குள் வினாத்தாளை எழுதுவதற்கும் பயிற்சி செய்ய வேண்டும்.

summary

Do you know the secret behind how CBSE question papers are prepared?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.