வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!
குடியாத்தம் பிங்க் வாக்குச்சாவடியில் பூ கொடுத்து வரவேற்ற ரோபோ பற்றி
குடியாத்தத்தில் வாக்காளர்களைத் தமிழில் பேசி ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பெண் ரோபோவை வாக்காளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்து வருகின்றனர். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே குடியாத்தம் நகராட்சி பள்ளியில் பிங்க் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் புடவை அணிந்த பெண் ரோபோ கையில் ரோஜா பூக்களுடன் வாக்களிக்க வந்த வாக்காளர்களைத் தமிழில் பேசி வரவேற்றது. வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ரோபோவை ஆச்சரியத்துடன் கண்டு வியந்தனர்.
In Gudiyatham, voters watched with amazement and delight as a female robot welcomed them by speaking in Tamil and offering them roses.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.