FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தொகுதிகள்

தொகுதி அறிமுகம்..... அம்பத்தூர்

Updated On : 2 ஏப்ரல் 2026, 5:59 am IST
பகிர்:

தொகுதி எண்: 8

அடங்கியுள்ள பகுதிகள்...

சென்னை மாநகராட்சி 7-ஆவது மண்டலமான அம்பத்தூரில் 79 முதல் 93 வார்டு வரை உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்போது, வில்லிவாக்கம் பேரவைத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

எல்லைகள்...

தொகுதியின் வடக்கே மாதவரம், தெற்கே மதுரவாயல், கிழக்கே வில்லிவாக்கம், அண்ணா நகர், மேற்கே ஆவடி தொகுதிகள் எல்லைகளாக உள்ளன.

சிறப்புகள்...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 1,500- க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் நிறுவனங்களும் உள்ளன. அம்பத்தூரைச் சுற்றி பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, வானகரம், அயனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களும் அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

வாக்காளர்கள் விவரம்...

ஆண்கள்

1,62,248

பெண்கள்

1,68,175

மூன்றாம் பாலினத்தவர்

57

மொத்தம்

3,30,480

வாக்குச்சாவடிகள்

364

இதுவரை எம்எல்ஏக்கள்...

2011 எஸ்.வேதாச்சலம் (அதிமுக)

2016 வீ.அலெக்ஸôண்டர் (அதிமுக)

2021 ஜோசப் சாமுவேல் (திமுக)

2021 பேரவை தேர்தலில்...பதிவான வாக்குகள்

3,84,377

ஜோசப் சாமுவேல்

(திமுக)

1,14, 554

வீ.அலெக்ஸாண்டர்

(அதிமுக)

72,408

தேர்தல் நடத்தும் அலுவலர் பெயர்/எண்

பிரபாகரன், அம்பத்தூர் மண்டல அலுவலர்- 94451 90007

உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்: டோலி, அம்பத்தூர் வட்டாட்சியர்

- 88077 48050

மின்னஞ்சல்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments