வேலைவாய்ப்பு

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். C.No.11/39/154/2021-CCA-Estt

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Tax Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Gr-II
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதனை 50 நிமிடத்தில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், ஹிந்தியில் 65 நிமிடத்திலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Havaldar
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம், மார்பளவு 81 செ.மீ அகலம், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 156 செ.மீ உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 31.12.2021 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Additional Commissionat-CCA, GST & Central Excise, Tamilnadu & Puducherry Zone, GST Bhavan, Nungampakkam, Chennai.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: வ31.12.2021

இ-மெயில் ஐடி: Prcco.ccaestt.sr@gmail.com

மேலும் விவரங்கள் அறிய www.centralexcisechennai.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

SCROLL FOR NEXT