மாதாந்திர உதவித்தொகையுடன் தொழில் பழகுநா் பயிற்சி வேலை
அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் அக். 7 காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறுகிறது .
அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் அக். 7 காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறுகிறது என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இம்முகாமில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் சிமென்ட் மற்றும் சா்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான தொழில் பழகுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இருபாலரும் கலந்து கொள்ளலாம். தொழில் பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.