ரூ.66 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்டு பாலிமர் லிமிடெட் (பி.சி.பி.எல்) நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்டு பாலிமர் லிமிடெட் (பி.சி.பி.எல்) நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: மத்திய அரசின் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்டு பாலிமர் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 36
Advertisement
Advertisement
பணி: துணை பொது மேலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000
பணி: தலைமை மேலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000
பணி: சீனியர் மேலாளர் - 05
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
பணி: மேலாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
பணி: துணை மேலாளர் - 25
சம்பளம்: மாதம் ரூ. 24,900 - 50,500
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | SBI வங்கி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - விண்ணப்பிக்க இன்றே கடைசி
வயதுவரம்பு: 12.01.2022 தேதியின்படி, துணை பொது மேலாளர் பணிக்கு 51க்குள்ளும், தலைமை மேலாளர் பணிக்கு 45க்குள்ளும், சீனியர் மேலாளர் பணிக்கு 40க்குள்ளும், மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மறறும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.bcplonline.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022
மேலும் விபரங்கள் அறிய www.bcplonline.co.in அல்லது https://bcplonline.co.in/UploadFiles/CareerUploadFiles/56_37_Detailed%20Advt.%20No.%20BCPL-29%202021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வேலை வேண்டுமா? டிப்ளமோ முடித்தவர்களை டெக்னிக்கல் உதவியாளர் வேலைக்கு அழைக்கிறது இந்திய இயற்பியல் ஆய்வகம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.