வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Court Assistant
காலியிடங்கள்: 210
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.7.2022
மேலும் விவரங்கள் அறிய https://main.sci.gov.in/recruitment அல்லது https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.