சூப்பர் வேலைவாய்ப்பு... மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
பல்நோக்கு மின் உற்பத்தி நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்நோக்கு மின் உற்பத்தி நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.PLR/ET-2024/GATE/5/3
Advertisement
Advertisement
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: Executive Trainee
i. Mechanical -59
ii. Electrical - 58
iii. C&I - 15
iv. Civil - 39
v. IT - 3
vi. Chemical - 2
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
வயதுவரம்பு: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் கேட்-2023 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.dvc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.