கலாக்ஷேத்ராவில் ஆசிரியர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
கலாக்ஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகலாக்ஷேத்ராவில் ஆசிரியர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
கலாக்ஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாடவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Bharatanatyam - 5
2. Vocal - Carnatic Music - 6
3. Veena –Carnatic Music - 2
4. Mirudangam- Carnatic Music - 3
5. Violin - Carnatic Music - 1
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இசை அல்லது நாட்டிய பிரிவில் கலாக்ஷேத்ராவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் வேறு இசைக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
வயதுவரம்பு: 60-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 36,000
பணி: மொழிப்பாட ஆசிரியர்கள்
1. Tamil - 1
2. English - 1
3. Telugu - 1
4. Sanskrit - 1
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000. சமஸ்கிருதம் ஆசிரியர் பணிக்கு ரூ.30,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 60-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kalashetra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600 041
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.