எஸ்பிஐ வங்கியில் அலுவலர் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாயப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாயப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CRPD/SCO/2025-16/15
பணி: Investment Officer (IC)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 46
தகுதி: நிதியியல், கணக்கியல், வணிக மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம், வங்கியியல், முதலீடு சந்தையியல், காப்பீடு பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ, சிஎப்ஏ தேர்ச்சியுடன் 4 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Development Manager (Business)
காலியிடங்கள்: 2
தகுதி: வணிக மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிஎம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Central Research Team (Support)
காலியிடங்கள்: 2
தகுதி: வணிகவியல், நிதியியல், பொருளாதாரம், மேலாண்மை, கணிதம், புள்ளியியல் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: 750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டண் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.11.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.