முகப்பு

உலோகவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ஆராய்ச்சி மையத்தில் நேரடி நியமனம் அல்லது பணி இடமாற்றம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்து...

26 வினாடிகள் முன்பு
உலோகவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
உலோகவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை - ARCI
பகிர்:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம். இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்ற, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் வணிக ரீதியாகச் செயல்படக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது இந்த ஆராய்ச்சி மையத்தின் நோக்கமாகும். இந்த ஆராய்ச்சி மையமானது ஒரு சிறந்த பணிச்சூழலையும், அதிநவீன வசதிகளையும், அறிவுசார் சுதந்திரத்தையும் வழங்குவதுடன்; ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் முழு படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

தற்போது, இந்த ஆராய்ச்சி மையத்தில் நேரடி நியமனம் அல்லது பணி இடமாற்றம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமுள்ள மற்றும் பணி அனுபவம் கொண்ட இந்தியக் குடிமக்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பார்ப்போம்...

Advertisement

Advertisement

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ARCI/HRD/RECT/1/2026

பணி: Scientist - B (R & D)

காலியிடங்கள்: 4

தகுதி: பொறியியல் துறையில் பொருளறிவியல் மற்றும் பொறியியல் அறிவியல், உலோகவியல் பொறியியல், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொரு துறைகளில் பிஇ, பி.டெக். முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,18,110

வயது வரம்பும்: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer-B(Finance & Accounts)

காலியிடம் : 1

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,18,110

வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant - A

காலியிடங்கள்: 7

தகுதி: உடல்சார் அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டம் அல்லது பொறியியல் துறையில் உலோகவியல், இயந்திரவியல்

மின்னியல் பொறியியல் அல்லது அதற்கு இணையான பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.73.020.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Assistant-A

காலியிடங்கள்: 6

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.61,240

பணி: Technician - A

காலியிடங்கள்: 9

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன் டிரேடில் 2 ஆண்டுகள் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.54,210.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Driver-A

காலியிடங்கள்: 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்திற்குரிய ஓட்டுநர் உரிமமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறனும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.39,970

வயதுவரம்பு: 27-க்குள் இருக்கவேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://arci.res.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Its mission is to develop highly competitive and commercially viable technologies for Indian and global markets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.