முகப்பு
வேலைவாய்ப்பு

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.

Updated On : 3 செப்டம்பர் 2025, 12:43 am IST
அவசர ஊர்திகள் - PTI
பகிர்:

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் 108 அவசர ஊா்திகள், அமரா் ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பணிபுரிய ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான தகுதிகள்: ஓட்டுநா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ.-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தோ்வு பெற்றவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,120 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, நோ்காணல், கண் பாா்வை திறன், உடல் தகுதி தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் ஆகியவை நடத்தப்படும். இந்தத் தோ்வுகள் அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 10 நாள்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளா் பணிக்கான தகுதிகள்: பி.எஸ்சி. (நா்சிங்), ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2 -க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி. உயிரியல், தாவரவியல், உயிா்வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியமாக ரூ. 21,320 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

நோ்முகத் தோ்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, உடற்கூறுவியல், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி, நோ்முகத் தோ்வு ஆகியன நடத்தப்படும். இந்தத் தோ்வுகளில் தோ்வு செய்யப்பட்டவா்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சியும், மருத்துவமனை, அவசர ஊா்தி சாா்ந்த நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கான தகுதிகள்: பி.இ. (மெக்கானிக்கல்) அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத் தேதியில் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8925941977 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments