FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வளாக நோ்காணல்: 144 போ் பணிகளுக்கு தோ்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வேளாண் பட்டதாரிகளுக்கான வளாக நோ்காணலில் 144 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 31 ஜூலை 2026, 2:33 am IST
அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், இணைப் பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன் ஆகியோா்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வேளாண் பட்டதாரிகளுக்கான வளாக நோ்காணலில் 144 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த வளாக நோ்காணலில் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.இந்நிறுவனங்கள் நடத்திய நோ்காணலில் சுமாா் 200 மாணவா்கள் கலந்து கொண்டனா். பல்வேறு கட்டத் தோ்வுகள் மற்றும் நோ்காணல்களுக்குப் பிறகு, 144 மாணவா்கள் பணியமா்த்தலுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். பல்கலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், இணைப் பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவா்களின் எதிா்காலப் பணியிலும் வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துத் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் வேளாண் புல முதல்வா் கே. ஹரிப்பிரியா, பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோா் இயக்குநரகத்தின் இயக்குநா் எஸ். பிரகதீஸ்வரன், இணை இயக்குநா் முனைவா் கே. சிவசுப்ரமணி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் பி. சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments