உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணி...
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Intelligence Officer-II/Tech (JIO-II/Tech)
காலியிடங்கள்: 394 (SC-60, UR-157, EWS-32, OBC-117, ST-28)
Advertisement
Advertisement
சம்பளம் : மாதம் ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்பியூட்டர் அப்பிளிகேசன் போன்ற ஏதாவதொன்றி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம் பிசிஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.9.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவை பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் General பிரிவு மற்றும் Mental Ability, General Science, English Communication, Reasoning போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கணினியில் பணிபுரியும் திறன் பரிசோதிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ், ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.650. இதர பிரிவினர்கள் மற்றும் பெண்கள் ரூ 500 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
விண் ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை டவுன்லோடு செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14. 9.2025
Online applications are invited from Indian nationals for direct recruitment to the post of Junior Intelligence Officer Grade-II/Tech i.e., JIO-II/Tech in the Intelligence Bureau, Government of India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.