FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு: 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள 242 பணியிடங்கள் குறித்து...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:11 pm IST
இஸ்ரோவில் சூப்பர் வேலைவயாப்பு அறிவிப்பு - DPS
பகிர்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள 242 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர் மற்றும் இளநிலை தனிப்பட்ட உதவியாளர், சுருக்கெழுத்தாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்துவரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி மற்றும் மண்டல வாரியான காலியிடங்கள் குறித்து பார்ப்போம்...

மொத்த காலியிடங்கள்: 242

Advertisement

Advertisement

பதவி: Assistants

அகமதாபாத் - 27

பெங்களூரு - 26

ஹாசன் - 1

ஹைதராபாத் - 13

மகேந்திரகிரி - 7

புது தில்லி - 1

ஸ்ரீஹரிகோட்டா - 32

திருவனந்தபுரம் - 6

பதவி: Upper Division Clerk

பெங்களூரு - 22

பதவி: Stenographer

பெங்களூரு - 10

சம்பளம்: மாதம் ரூ.25,500

பதவி: Junior Personal Assistant

அகமதாபாத் - 21

பெங்களூரு - 19

ஹாசன் - 2

ஹைதராபாத் - 2

மகேந்திரகிரி - 2

ஸ்ரீஹரிகோட்டா - 14

திருவனந்தபுரம் - 21

பதவி: இளநிலை உதவியாளர்கள்

விண்வெளித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களுக்கான உதவியாளர்கள்

அகமதாபாத் - 11

ஸ்ரீஹரிகோட்டா - 3

திருவனந்தபுரம் - 3

பதவி: Junior Personal Assistants

விண்வெளித் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களுக்கான இளநிலை தனிப்பட்ட உதவியாளர்கள்

அகமதாபாத் - 1

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவு பெற்றவராகவும், பணி அனுபவமும் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.8.2026 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறை களின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.500 திரும்ப வழங்கப்படும். இதர பிரிவினருக்கு ரூ.400 திரும்ப வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Indian Space Research Organisation invites online recruitment application...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments