அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு... எய்ம்ஸ் நிறுவனத்தில் 2218 நர்சிங் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
எய்ம்ஸ் மற்றும் மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2218 செவிலியர் அலுவலர் பணி தொடர்பாக...
நாடு முழுவதும் செயல் பட்டுவரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகள் (எய்ம்ஸ்) மற்றும் மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2218 செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 103/2026
Advertisement
Advertisement
பணி: Nursing Officer (NORCET-11)
காலியிடங்கள்: 2218 எய்ம்ஸ் மருத்துவமனை வாரியாக ஏற் பட்டுள்ள காலியிடங்கள், காலியிடப் பகிர்வு விவரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,800
வயதுவரம்பு: 13.8.2026 தேதியின்படி18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி (டிஜிஎன்எம்) முடித்திருக்க வேண்டும். மாநில, இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளராகப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல் கட்ட தேர்வு நடைபெறும் தேதி: 12.9.2026
இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் தேதி: 30.9.2026
கணினி வழியில் நடைபெறும் முதல் கட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட கணினி வழி முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் செவிலியர் பாடப்பிரிவிலிருந்து 160 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு 3,000. எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.2,400. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
All India Institute Of Medical Sciences invites online recruitment applications for the 2218 Nursing Officer vacancies on regular basis.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.