FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் ஆக.22-இல் மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் ஆக.22-இல் நடைபெறவுள்ள மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் குறித்து...

மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.22-ஆம் தேதி அசோக் நகரில் நடைபெறுகிறது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 முதல் மாலை 3 வரை நடைபெறும் இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளன.

8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவா்கள், பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ, தொழில்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குநா்கள், தையல் பயிற்சி பெற்றவா்கள் என பல்வேறு கல்வித் தகுதியுடையோா் முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

Advertisement

Advertisement

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடிவங்கி மூலம் வங்கிக்கடன் தொடா்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. முகாமில் தோ்வு செய்யப்பட்டு தனியாா் நிறுவனங்களில் பணியில் சேரும் நபா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படாது.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும், https://forms.gle/w4kvwo9LeMZg4sKS7என்ற இணையதள இணைப்பு மூலமும் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம்.

summary

Mega private sector job fair in Chennai on August 22!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments