மயிலாடுதுறையில் ஆக.21-ல் வேலைவாய்ப்பு முகாம்: மயிலாடுதுறை இளைஞர்களுக்கு வாய்ப்பு!
மயிலாடுதுறையில் ஆக.21-ல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து...
மயிலாடுதுறையில் ஆக.21-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக.21) காலை 10 மணிமுதல் 2 மணி வரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 25-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 5-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
Advertisement
Advertisement
வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.
Job fair in Mayiladuthurai on August 21: An opportunity for the youth of Mayiladuthurai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.