தஞ்சையில் நாளை மெகா தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஆக. 21) நடைபெற இருக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து...
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்படுகின்றன.
இதன்படி, ஆக. 21காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளன. இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முகாமில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்பவா்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.
வேலை நாடுநா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
Private sector job fair in Thanjavur on August 21
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.