நைனி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்கள் குறித்து...
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தின் துணை நிறுவனமான நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம், உத்தரப் பிரதேச மாநில தொழில் வளர்ச்சி கழகத்தால் பிரயாக்ராஜின் நைனி தொழிற்பேட்டையில் 2016 டிசம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது.
இந்நிறுவனம் விமானம், ஹெலிகாப்டர் வயரிங் அமைப்புகள், எல்சிஏ-விற்கான ஸ்டப் விங்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களுக்கான கட்டமைப்புகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது.
ரிமோட் பைலட் பயிற்சிக்கான டிஜிசிஏ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு, நிர்வாகம் சாராத பிரிவில் உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் பணியில் சேரும் நாள்களில் இருந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், எந்தவித கூடுதல் அறிவிப்பும் இன்றி பணிக்காலம் தானாகவே முடிவடைந்துவிடும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NAel/Rectt/26/02
பணி: Operator SS
பிரிவு : Electronics Mechanic
காலியிடங்கள்: 8
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 5
பிரிவு: Electrician
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.19,790
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரீசியன் பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
பிரிவு: IMM
காலியிடங்கள்: 3
தகுதி: பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சார்ந்த படிப்பில் 6 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: HR
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணினி சார்ந்த படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 2
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சார்ந்த படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: IT
காலியிடங்கள்: 2
தகுதி: கணினி, ஐடி பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,769
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. இதனை ஆன்லைன் மூலம் செலத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nael.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited from eligible candidates in the prescribed Performa for the following posts on Fixed Term Employment (FTE) Basis for a period of Four (04) years in the Non-Executive cadre...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.