விண்ணப்பித்துவிட்டீர்களா..? 6,175 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் 'துணை மேலாளர்,' 'நிர்வாகப் பயிற்சி அதிகாரி' பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...
வங்கித் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கான ஒரு நல்வாய்ப்பாக, 2027-2028 ஆம் ஆண்டிற்கான பொதுவான ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் 'துணை மேலாளர்,' 'நிர்வாகப் பயிற்சி அதிகாரி' பணியிடங்களுக்கான முதன்மை தேர்வை அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையமான இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு வங்கி பணியில் சேர விரும்பமும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து நாளைக்குள்(ஜூலை 21) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அது குறித்த விவரங்கள் பார்ப்போம்...
பணி: துணை மேலாளர் (PO),மேலாண்மை பயிற்சி (MT)
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 6,715
வயது வரம்பு : 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி,எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்ட் 2026.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோயில், சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் 2026.
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, கோயம்பத்தூர், நாமக்கல்
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ibps.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.7.2026.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited from eligible and interested candidates aspiring to join as a Probationary Officer/ Management Trainee in any of the Participating Public Sector Banks listed at (A) for the Common Recruitment Process...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.