நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கர் உடைக்கப்பட்டிருப்பது பற்றி....
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு மத்தியிலும், திரிசூலி ஆற்றில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கர் ஒன்றை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 29 பேரைப் பிடித்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாயை மீட்டுள்ளது.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவாவிலிருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த வங்கி லாக்கர், தாடிங் மாவட்டத்தில் உள்ள பெல்குகோலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு வருவதற்குள், உள்ளூர் வாசிகள் சிலர் அந்த லாக்கரை உடைத்து பணத்தைக் திருடிச் சென்றதாகக் போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நேபாள் போலீஸார் மற்றும் ஆயுதப் படைப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 29 பேரும் தாடிங் மாவட்டக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லாக்கரில் எவ்வளவு பணம் இருந்தது என்பதை போலீஸார் இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், அந்த லாக்கரின் உரிமையாளர் யார், அதிகாரிகள் வருவதற்கு முன்பு வேறு யாரேனும் பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.
Even as devastating floods tore through Nepal, a group of people allegedly broke open a bank locker that swept down the Trishuli River and took the cash inside. Police have now detained 29 people and recovered more than 92 lakh Nepalese rupees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.