FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளம்! மூன்றில் ஒரு பேருந்திலிருந்தவர்கள் மட்டும் தப்பியது எப்படி?

நேபாள வெள்ளத்தில் சிக்கிய மூன்றில் ஒரு பேருந்திலிருந்தவர்கள் மட்டும் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியானது..

நேபாள வெள்ளம் - ENS
பகிர்:

நேபாள திடீர் வெள்ளத்தின்போது, பேருந்திலிருந்து இறங்கி அருகில் இருந்த சிறு குன்றின் மீது ஏறியதால்தான் தாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தமிழகத்திலிருந்து நேபாளம் சென்று வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நேபாள வெள்ளத்தின்போது, கும்பகோணத்திலிருந்து சென்ற குழுவினர் பயணித்த மூன்று பேருந்துகளில் ஒரு பேருந்தில் இருந்த 21 பேர் மட்டும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இவர்களுடன் வந்த மேலும் இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியான டிமுரேவில் உள்ள ஆயுதப் படை சோதனைச் சாவடியிலிருந்து இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்ட திருச்சி பகுதியைச் சேர்ந்த 20 பேரும், அவர்களது பேருந்துப் பணியாளர்களும் நேற்று காத்மாண்டுவை வந்தடைந்தனர். இவர்களில் 11 பேர் கொண்ட குழுவினர் திரிசூலி ராணுவப் பயிற்சி முகாமிலும், மற்றவர்கள் மற்றொரு இடத்திலும் தங்க வைக்கப்பட்டதாக கும்பகோணம் ஏஜென்ஸி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

இது குறித்து திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த எம். சிவரஞ்சனி என்பவர், எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் பேசுகையில், "நாங்கள் 20 பேரும் மரணத்தின் பிடியிலிருந்து அதிசயமாக உயிர் பிழைத்தோம். இறைவனின் அருளால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்," என்று ராணுவ முகாமிலிருந்து காத்மாண்டுவிற்குப் பயணித்தபோது, தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

ம்பகோணத்தைச் சேர்ந்த 'சூப்பர் யாத்ரா ஏஜென்சி' மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட 57 பேரில் இவரும் ஒருவர்; இவருடன் திருச்சி, தில்லை நகரைச் சேர்ந்த எஸ். வல்லினாயகி (63) மற்றும் கே.கே. நகரைச் சேர்ந்த ஆர். கற்பகம் (62) ஆகியோரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இதுகுறித்து மேலும் கூறிய சிவரஞ்சனி, ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தங்கள் வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தியிருந்தபோது அங்கே திடீரென பெருவெள்ளம் தாக்கியது. வெள்ளம் சூழ்ந்தபோது, ​​எங்கள் குழுவினர் உட்பட மொத்தம் 21 பேர் இரண்டு பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். போக்குவரத்து நெரிசல் காரணமாக எங்கள் ஓட்டுநர் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்திருந்தார்; அப்போது எங்களுக்கு முன்னால் இருந்த பேருந்து முன்னே சென்றுவிட்டது, மற்றொன்று எங்களுக்கு வெகு தொலைவில் பின்னால் இருந்தது.

ஆற்றுக்கும் சாலைக்கும் இடையே சற்று இடைவெளி இருந்த ஒரு வளைவுப் பகுதியில்தான் எங்கள் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆபத்தை உணர்ந்த நாங்கள் பேருந்திலிருந்து கீழே இறங்கி, மிகுந்த சிரமத்துடன் மலையேறிச் சென்று ஒரு ராணுவ முகாமை அடைந்தோம். எங்கள் குழுவில் பலர் முதியவர்கள் இருந்தனர். அவர்களும் மிகவும் சிரமப்பட்டு மலை மீது ஏறினார்கள்.

அங்கிருந்த ராணுவ முகாமில் மிகுந்த அச்சத்துடன் இரவைக் கழித்தோம். பின்னர் வியாழக்கிழமையன்று, ஹெலிகாப்டர் இறங்குதளம் ஒன்றை அடைவதற்காக நீண்ட தூரம் நடந்து சென்று, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டோம் என்கிறார்.

பேருந்திலேயே, கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) உள்பட அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம். தேவையான நடைமுறைகளை முடித்து எங்களை ஊருக்கு அனுப்ப இந்தியத் தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற இரண்டு பேருந்துகளுக்கும் என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Nepal Floods! How did only the passengers of one out of three buses manage to escape?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments