நேபாள வெள்ளம்! அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்ய முடிவு!
நேபாள வெள்ளத்தில் பலியாகி அடையாளம் தெரியாதவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு...
நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் அங்குள்ள கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளைச் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரிடரில், 600-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், மாயமான ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் இன்று (ஆக. 29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமமான ஒன்றாகியுள்ளது.
இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில், தேவ்காட் பகுதியில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு உடலுக்கும் அடையாள எண்கள் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்படும் என நேபாள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இதுவரை அடையாளம் காணப்படாத 229 உடல்களும் சர்வதேச வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Government of Nepal has announced its decision to bury the bodies of unidentified victims of the floods.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.