FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

அட்டகாசமான வாய்ப்பு... உதவித்தொகையுடன் எச்பிசிஎல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

எச்பிசிஎல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...

Updated On : 30 ஜூலை 2026, 11:25 pm IST
உதவித்தொகையுடன் எச்பிசிஎல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி - கோப்புப்படம்
பகிர்:

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட். மும்பையை தலைமை இடமாகக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமாகும்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலிய பொருள்கள் விற்பனை மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை 2018-ஆம் ஆண்டு முதல், 'ஓஎன்ஜிசி' தன்வசம் கொண்டுள்ளது. 2016-இல் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலான 'ஃபார்ச்சூன் குளோபல் 500'-இல் 367-ஆவது இடத்தைப் பிடித்தது. 2019 அக்டோபர் 24 ஆம் தேதி 'மகாரத்னா' அந்தஸ்தைப் பெற்றது.

இந்நிறுவனத்தில் பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்த பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இது குறித்த விபரம் வருமாறு:

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள்: 358

உதவித்தொகை: ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும், இதர அனைத்து பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.9.2023-க்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 31.7.2026 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படை யில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: அனைத்து விண்ணப் பதாரர்களும் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்கள் கல்வித் தகுதியை முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.jobs.hpcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The Hindustan Petroleum Corporation Limited has officially announced a massive 2026 recruitment Notification to fill 358 Apprentice vacancies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments