பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....
தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை என்பது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பேணவும், தொற்றும் மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வரும் முக்கிய அரசுத் துறையாகும்.
இந்த துறையின் மூலம் தடுப்பூசி திட்டங்கள், மகப்பேறு மற்றும் குழந்தை நலம், தொற்ரு நோய்கள் கட்டுப்பாடு, தொற்ரா நோய்கள் தடுப்பு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு ஆகியவை இதன் முக்கிய செயல்பாடுகள் மற்றும் சேவைகள் ஆகும்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள் மூலம் 24 மணி நேரமும் இலவச அல்லது குறைந்த கட்டண மருத்துல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு துறையின்கீழ் செயல்படும் தேசிய ஊரக நலத்திட்டத்தில் காலியாகவுள்ள நகர்ப்புற சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஆலோசகர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவ அலுவலர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:
பணி: Medical Officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: MBBS தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
பணி: Urban Health Nurse/ANM
காலியிடங்கள்: 30
சம்பளம்: ரூ.14,000
கல்வித்தகுதி: ANM தேர்ச்சியுடன் தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: + 2 தேர்ச்சியுடன் DMLT-ல் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
பணி: Health Inspector
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் பலநோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பில் இரண்டு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Counsellor
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: சமூகவியல், உளவியல், சமூகப் பணி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணி களுக்குமான வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பிதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, சமாதானபுரம், பாளையம்கோட்டை, திருநெல்வேலி - 627002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.6.2026
District Health Society Thirunelveli, Contractual posts Applications are invited from eligible candidates through offline mode only till june 5 to fill the following vacant in posts of...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.