தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இயல்வது கரவேல் திட்டத்திற்கான நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இயல்வது கரவேல் திட்டத்திற்கான நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் முயற்சியானது, சட்டப் பிரதிநிதித்துவத்தின் தரத்தை மேம்படுத்தவும், விளிம்புநிலை சமூகங்களுக்கு நீதி கிடைப்பதை விரிவுபடுத்தவும் தேவையான சிறப்புத் திறன்களை, இலவச சட்ட உதவியில் கவனம் செலுத்தும் இளம் வழக்குரைஞர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்த, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணி: Project Co-ordinator
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.65,000
தகுதி : சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது சமூகப் பணி, பொதுக் கொள்கை பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Program Manager
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 40,000
தகுதி: சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது சமூகப் பணி, பொதுக் கொள்கை பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Documentation Officer
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி : ஏதாவதொரு ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: வணிகவியல், கணக்கியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டாலி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnnlu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Tamil Nadu National Law University (TNNLU) invites applications for administrative and office roles for the Project Eyalvathu Karavel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.