குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இரு தற்காலிகப் பணியிடங்கள் அறிவிப்பு குறித்து...
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இரு தற்காலிகப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மிஷன் வாட்சல்யா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும். தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் குழந்தைள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) மற்றும் புறத் தொடர்பு புணியாளர் ஆகிய இரண்டு காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: பாதுகாப்பு அலுவலர்
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ. 27,804
தகுதி: சமூகப் பணி, சமூகவியல், உளவியல், மன நலம், சட்டம், பொது சுகாதாரம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: புறத் தொடர்பு புணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.11,574
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குழந்தைகள் தொடர்பான பணி செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sivagangai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை - 630 562 என்ற முகவரிக்கு வரும் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். தகுதிவாய்ந்த ஒருவா் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Vacancy notification for Protection Officer on contract basis in District Child Protection Office, Sivaganga
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.