ரயில்வேயில் ஆசிரியர், இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சித்ரஞ்சன் ரயில்வேயின் நிர்வாகப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள முதுநிலை ஆசிரியர், இளநிலை பொறியாளர் பணியிடங்கள் குறித்து...
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சித்ரஞ்சன் ரயில்வேயின் நிர்வாகப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள முதுநிலை ஆசிரியர், இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். No.GDCE 01/2026
பணி: Post Graduate Teacher (PGT)
Advertisement
Advertisement
சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: Hindi, Political Science, Chemistry, Maths, Economics, Physics, History, Computer Science,Biology,Accountancy, Business studies போன்ற ஏதாவதொரு பாடத் தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (P-Way, Works)
சம்பளம்: ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Depot Material Superintendent
சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: : பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 42- க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்து பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.clw.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.5.2026
குறிப்பு
* முதுகலை, இளநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிடெட்(CTET)தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* விண்ணப்பதாரரின் உச்ச வயதுவரம்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கதப்படும்.
Chitaranjan Locomtive Works(CLW) invites application from regular and eligible employees for filling up the following posts.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.