தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 'அலுவலக வாகன ஓட்டுநர் பணி': விண்ணப்பிப்பது எப்படி..?
இந்திய அல்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள 'அலுவலக வாகன ஓட்டுநர்' பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
இந்திய அல்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள 'அலுவலக வாகன ஓட்டுநர்'(பொது மத்திய பணி, குரூப்-சி, கெஜட் அல்லாத, அமைச்சகம் சாராத பணி) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விவரங்கள் வருமாறு
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: MSE/B9/XVI/2022-2023
பணி: Staff Car Driver
காலியிடங்கள்: 24
சம்பளம்: 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மாதம் ரூ. 19,900 - 63,200 + இதர சலுகைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களில் சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஓட்டுநர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு பற்றிய விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்குவரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Senior Manager (Group-A), Mail Motor Service, No.37, Greams Road,Chennai – 600 006."
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.