மிஸ்பண்ணிடாதீங்க...சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!
சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் படித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் படித்தவர்களுக்கான ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான( அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்தவர்களிடமிருந்து அக்.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம் வருமாறு:
பயிற்சி: Graduate Apprentices (Engineering)
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்:76
பிரிவு வாரியான காலியிடங்கள்:
* சிவில், மெக்கானிக்கல் - 52
* எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 24
உதவித்தொகை: மாதம் ரூ.12,300
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
பயிற்சி: Diploma Apprentices (Techician Apprentices)
மொத்த காலியிடங்கள்: 32
பிரிவு வாரியான காலியிடங்கள்:
* சிவில் - 10
* எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 22
உதவித்தொகை: மாதம் ரூ.10,900
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். அதாவது 2022, 2023, 2024, 2025, 2026 ஆம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஏற்கெனவே பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்று வருபவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் அக்டோபர் மாதம் BOAT இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வு நவம்பர் முதல் வாரம் நடைபெறும். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Top Down Button-ஐ கிளிக் செய்து அதிலிருந்து Chennai Metropolitan Water Supply and Sewerage Board செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.10.2024
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications invited from Tamil Nadu candidates with Graduate Engineering (Civil/Mechanical/EEE) or Diploma Engineering (Civil/EEE) qualifications passed during 2022-2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.