FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!

தினமணி இணையதளச் செய்தி எதிரொலியாக, அயனாவரம் கழிவுநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வுக் காணப்பட்டது பற்றி...

20 வினாடிகள் முன்பு
அயனாவரம் கழிவுநீர் பிரச்னை - from video grab
பகிர்:

தினமணி இணையதளச் செய்தி எதிரொலியாக, அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் கழிவுநீர் பிரச்சினையைச் சீரமைக்க 3 லாரிகளுடன் களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்.

செய்தி வெளியானதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலைப் பகுதியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசுப் பேருந்து நிலையம் எதிரே சாலையில் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள், பேருந்துப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்த செய்திகள் மற்றும் விடியோ காட்சிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி இணையதளங்களில் வெளியிடப்பட்டன. இதன் எதிரொலியாக, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் மூன்று லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றி, பிரச்னையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி மக்கள், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், தங்களது நீண்ட நாள் பிரச்னையைச் செய்தியாக வெளியிட்டு, அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி இணையதள செய்தி நிறுவனங்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

summary

Impact of a Dinamani online news report: Sewage issue in Ayanavaram – Water Board officials step in!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.